போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
திருவண்ணாமலையில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தை திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
திருவண்ணாமலை நகர மற்றும் போக்குவரத்து போலீசார் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மாடவீதியில் வலம் வந்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.