கடலூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி

கடலூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெற்றது.

Update: 2023-06-27 20:37 GMT

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கடலூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஓவியப்போட்டி கடலூரில் நடைபெற்றது. இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமை தாங்கி, விழிப்புணர்வு ஓவியப் போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும், 9, 10-ம் வகுப்புகளுக்கும், 11 மற்றும் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் 64 மாணவ -மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர். போட்டியில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு நெய்தல் கோடை விழா அன்று பரிசு வழங்கப்பட உள்ளது. இதில் கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்