போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம்
கீழ்வெங்கடாபுரம் ஊராட்சியில் போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கீழ்வெங்கடாபுரம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி அறிவுறுத்தலின் பேரில் நெமிலி போலீசார் சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இதில் நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு, ஊராட்சி மன்ற தலைவர் அம்மு தட்சிணாமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் விநாயகம், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.