பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோவில் கைது

செய்யாறு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோவில் கைது

Update: 2022-07-24 15:06 GMT

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மாத்தூர் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் சந்தோஷ் (வயது 22), டிரைவர்.

இவர் பள்ளி மாணவியை கடந்த 2 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பள்ளி மாணவி கர்ப்பமானதால் சந்தோஷிடம் கூறிய போது, வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்