ஜேடர்பாளையத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட டிரைவரின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்

ஜேடர்பாளையத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட டிரைவரின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்

Update: 2022-10-07 18:45 GMT

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையத்தில் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட டிரைவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தற்காலிக டிரைவர்

ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 30). இவர் ஈரோடு தொழில்துறை அலுவலகத்தில் தற்காலிக டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பாலாஜி தனது நண்பர்களான திவாகர், அருண் மற்றும் செண்பகராஜ் ஆகிய 4 பேரும் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையத்துக்கு சுற்றுலா வந்தனர்.

பின்னர் அவர்கள் அங்குள்ள அண்ணா பூங்கா, படுகை அணை ஆகியவற்றை சுற்றி பார்த்துள்ளனர். இதனை தொடர்ந்து ஜேடர்பாளையம் பரிசல் துறை காவிரி ஆற்றுக்கு சென்று பாலாஜி தனது நண்பர்களுடன் குளித்தார். அப்போது பாலாஜி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

தேடும் பணி தீவிரம்

இதை பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து நண்பர்கள் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீனவர்களின் உதவியுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலாஜியை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்