ரூ.5¼ லட்சத்தில் குடிநீர் தொட்டிகள்
திருவண்ணாமலை நகராட்சியில் ரூ.5¼ லட்சத்தில் குடிநீர் தொட்டிகளை நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு பே கோபுரத் தெருவில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் புதிதாக ஒரு சிறுமின்விசை குடிநீர் தொட்டி கட்டப்பட்டும், 2 சிறுமின்விசை குடிநீர் தொட்டிகள் சீரமைக்கப்பட்டும் உள்ளது.
இந்த குடிநீர் தொட்டிகளை இன்று திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
நிகழ்ச்சியில் நகராட்சி உதவி பொறியாளர் ரவி, தி.மு.க. நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், நகரமன்ற துணை தலைவர் ராஜாங்கம், நகரமன்ற உறுப்பினர் மெட்ராஸ் கே.சுப்பிரமணி, வட்ட செயலாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.