வடகரை பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும்

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வடகரை பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-19 18:45 GMT

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு, கீழ்வேளூர் தாலுகா வடகரை ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கலெக்டர் அருண் தம்புராஜை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வடகரை பஞ்சாயத்து தையாபிள்ளை சேத்தி பகுதியில் குடிநீர் பைப்புகள் இல்லை. இதனால் இரண்டு கிலோமீட்டர் தூரம் பெருங்கடம்பனூருக்கு சென்று அங்குள்ள அடி பாம்பில் தண்ணீர் பிடிக்க வேண்டி உள்ளது. இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அந்த அடிப்பம்பில் ஆண்டுக்கு 5 மாதம் மட்டுமே நல்ல தண்ணீர் வரும். மற்ற நாட்கள் உப்பு நீராக மாறிவிடும். குடிநீர் இன்றி எங்கள் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே எங்கள் பகுதிக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் குழாய்கள் அமைத்து தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்