10 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
நெல்லையில் 10 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
நெல்லை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்துவரி, குடிநீர் கட்டணம் அதிகம் நிலுவை வைத்திருந்த நெல்லை மண்டலம் 15-வது வார்டு சாலியர் தெருவில் 3 வீடுகளிலும், 18-வது வார்டு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 2 வீடுகளிலும், 19-வது வார்டு நாராயணசாமி கோவில் தெருவில் 3 வீடுகளிலும், 20-வது வார்டு ஆதம்நகரில் 2 வீடுகளிலும் என மொத்தம் 10 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
நெல்லை மண்டல உதவி வருவாய் அலுவலர் சிவனையா, சிறப்பு வருவாய் ஆய்வாளர் வடிவேல் முருகன் ஆகியோர் அடங்கிய குழுவால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.