கடம்பாகுளம் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி

கடம்பாகுளம் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை மோகன் சி.லாசரஸ் தொடங்கி வைத்தார்.

Update: 2022-10-07 18:45 GMT

தென்திருப்பேரை:

தாமிரபரணி பாசன கடம்பாகுளம் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் நாலுமாவடி ஏசு விடுவிக்கிறார் ஊழியத்தின் புது வாழ்வு சங்கத்தின் இயற்கை காப்போம் திட்டத்தின் நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தூர்வாரும் பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை பாசன உதவியாளர் சண்முகவேல், குருகாட்டூர் விவசாய சங்கத்தலைவர் பால்சித்தர், கோட்டூர் விவசாய சங்கத்தலைவர் தானியேல் மற்றும் கோட்டூர் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்