மக்களின் கவலைகளைப் போக்கும் அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது : முதல் -அமைச்சர் பேச்சு
அண்ணா நுழைவு வாயிலையும், கருணாநிதியின் உருவ சிலையையும் திறந்து வைத்த பின்னர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
திருவண்ணாமலை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை - வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவச்சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .கருணாநிதியின் சிலை மட்டும் 8 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் பீடம் 13 அரை அடி உயரம் அமைந்துள்ளது. மொத்தமாகவாயிலை 21 அடி உயரத்தில் கருணாநிதி சிலை பிரமாண்டமாக உள்ளது.
அண்ணா நுழைவு வாயிலையும், கருணாநிதியின் உருவ சிலையையும் திறந்து வைத்த பின்னர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அதில் பேசிய அவர் கூறியதாவது ;
மக்களின் கவலைகளைப் போக்கும் அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. அண்ணாவின் ஆசைகள் ,கலைஞரின் கனவுகளை நிறைவேற்றிய திருப்தி எனக்கு உள்ளது.என கூறினார்.