வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்

மூங்கில்துறைப்பட்டு அருகே வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2022-06-13 18:43 GMT

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே கானாங்காடு பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாய்கள் உள்ளது. இந்த கால்வாய்களை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் அவை விவசாய நிலங்களுகளுக்குள் புகுந்துவிடுவதால் பயிர்கள் சேதமடைந்து வருகிறது. இதையடுத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து நேற்று பொதுப்பணித்துறை அதிகாரி அருணா தலைமையில் வருவாய்த்துறையினர் கானாங்காடு கிராமத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள், பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இருப்பினும் முறையாக அளவீடு செய்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் முழுமையாக அகற்றவில்லை என அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பெயரளவுக்கு மட்டுமே நடந்துள்ளது. இதனால் எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை. இதை தவிர்க்க வாய்க்காலை சரியாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை முழுமைாக அகற்ற உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்