டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா

சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் பள்ளியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-09-24 21:54 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா பள்ளி செயலர் காமராஜ் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி முதல்வர் மரிய ஹெலன் சாந்தி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* களக்காட்டில் அகில இந்திய காமராஜர் பேரவை சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அகில இந்திய காமராஜர் பேரவை தலைவர் துரை நாடார் தலைமை தாங்கினார். புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாங்குநேரி தொகுதி செயலாளர் ஈழவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தேசிய நாடார் கூட்டமைப்பு தலைவர் சிவாஜி ராஜன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக களக்காடு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட தலைவர் முகமது காசிர், களக்காடு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலாஜி, நகர செயலாளர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி களக்காடு ஒன்றிய செயலாளர் ஆனந்தசுந்தர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செல்வராஜ், சேகர், விக்டர், சண்முகம், சுடர்மணி, பா.ஜனதாவை சேர்ந்த ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்