ரெயில் முன் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்கக்கூடாது

ரெயில் முன் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-07-04 10:46 GMT

திருப்பூர்

திருப்பூர்-வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு இடையே நேற்று முன்தினம் திருநெல்வேலி-பிளாஸ்பூர் ரெயில் சென்றபோது, திருப்பூரை சேர்ந்த பாண்டியன் (வயது 23), விஜய் (24) ஆகிய இருவரும் மதுபோதையில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தபோது ரெயிலில் அடிபட்டு இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி வாழப்பாடி-ஏதாப்பூர் ரெயில் நிலையத்துக்கு இடையே காங்கேயன் (22) என்பவர் நண்பர்களுடன் வந்து செல்பி எடுக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

தண்டவாளத்தை கடந்து செல்வது சட்டப்படி குற்றமாகும். தண்டவாளத்தில் நடந்து செல்வது, விளையாடுவது, விளம்பர மோகத்தில் செல்பி எடுப்பது போன்ற செயல்களால் பலர் தங்களது விலைமதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுகிறது. எனவே இந்த தவறுகளை செய்யக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது. ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ரெயில்வே போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி காவல்துறையினரின் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும். பயணிகள் பாதுகாப்பு சம்பந்தமாக ரெயில்வே போலீஸ் உதவி மைய எண்.1512 மற்றும் வாட்ஸ்அப் எண் 99625 00500 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

----

Tags:    

மேலும் செய்திகள்