அரியலூர்: 10 பரோட்டா சாப்பிட்டால் காசு தர வேண்டாம் - சாப்பிட்ட நபருக்கு ரூ.100 பரிசு

உடையார்பாளையம் அருகே தனியார் ஓட்டல் சார்பில் பரோட்டா சாப்பிடும் போட்டி நடைபெற்றது.

Update: 2022-10-03 03:35 GMT

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தில் தனியார் ஓட்டல் சார்பில் பரோட்டா சாப்பிடும் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 10 பரோட்டா சாப்பிட்டால் அதற்கான தொகை ரூ.100 தர வேண்டியதில்லை என்றும், சாப்பிட்ட நபருக்கு ரூ.100 பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி இந்த போட்டியில் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பரோட்டா சாப்பிட்டனர். இந்த போட்டியில் 10 பரோட்டா சாப்பிட்டு 7 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு தலா ரூ.100 பரிசு வழங்கப்பட்டது. மற்றொரு போட்டியில் ஒரு டேபிளில் 4 பேர் சாப்பிடலாம். அதில் 5 பரோட்டாவை விட கூடுதலாக யார் சாப்பிடுகிறார்களோ அவர்கள் பணம் தர வேண்டியது இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் 5 பேர் வெற்றி பெற்றனர். இதனைதொடர்ந்து 'சிக்கன் ரைஸ்' 2 சாப்பிட்டால் அவர்கள் பணம் தரவேண்டியது இல்லை என்று அறிவித்திருந்தனர். ஆனால் இதில் யாரும் வெற்றி பெறவில்லை. இந்த போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்