தென்னாப்பிரிக்கா, கிளிமஞ்சாரோ மலை ஏற உள்ள வீராங்கனைக்கு ரூ.5 லட்சம் நன்கொடை

தென்னாப்பிரிக்கா, கிளிமஞ்சாரோ மலை ஏற உள்ள வீராங்கனைக்கு ரூ.5 லட்சம் நன்கொடை காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சார்பில் வழங்கப்பட்டது.

Update: 2023-08-27 09:01 GMT

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி (வயது 34). இவர் செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். மலையேறும் வீரரான இவர் கடந்த மே மாதம் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தார். அதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சமும், தன்னார்வ அமைப்புகள் சார்பில் ரூ.15 லட்சம் என ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

தமிழகத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்ற முத்தமிழ்செல்விக்கு காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக குன்றத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான படப்பை ஆ.மனோகரன் கலந்து கொண்டு முத்தமிழ் செல்வியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் அடுத்த கட்டமாக தென்னாப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ மலையில் ஏற உள்ள முத்தமிழ் செல்வியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5 லட்சம் நன்கொடையாக படப்பை மனோகரன் வழங்கினார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த, முத்தமிழ்செல்விக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்