சிறை நூலகங்களுக்கு 1,500 புத்தகங்கள் நன்கொடை : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சிறைக்கைதிகளை நல்வழி படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Update: 2023-10-28 07:11 GMT

சென்னை, 

சிறைக்கைதிகளை நல்வழி படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி சிறைக்கைதிகளிடம் வாசிப்பு திறனை அதிகப்படுத்தி அவர்களை நல்வழி படுத்தும் நோக்கில் சிறையில் உள்ள கைதிகளுக்காக பல இடங்களில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் நூலகங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சிறையில் உள்ள நூலகங்களில் போதிய புத்தகங்கள் இல்லாத நிலையில் சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் இருந்து புத்தகங்களை சேகரித்து தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளுக்கும் அனுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் சிறையில் உள்ள நூலகங்களுக்கு அரசு சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் உள்ள சிறை நூலகங்களுக்கு சுமார் 1,500 புத்தகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்கொடையாக வழங்கியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்