தி.மு.க. பெண் கவுன்சிலர் 'திடீர்' போராட்டம்

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலர் ‘திடீர்’ போராட்டம் நடத்தினார்.

Update: 2022-10-20 19:14 GMT

நெல்லை மாநகராட்சி அவசர மற்றும் சாதாரண கூட்டம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இந்திரா மணி நேற்று கருப்பு உடை அணிந்து நெல்லை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அவர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். அப்போது கையில் கோரிக்கை அட்டையும் ஏந்திக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து கவுன்சிலர் இந்திரா மணி கூறுகையில், ''பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் வகையில் நெல்லை மாநகராட்சியில் அதிக பெண் கவுன்சிலர்களை ஏற்படுத்தி கொடுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும். இல்லை என்றால் எனது பதவியை ராஜினாமா செய்வேன்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்