அரியலூரில் இன்று தி.மு.க. மாணவர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல்

தி.மு.க. மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் அரியலூரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.;

Update:2023-10-06 00:03 IST

அரியலூரில் மாவட்ட தி.மு.க. மாணவர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் அரியலூர் புறவழி சாலையில் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள திருமண மாகாலில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி, மாநில மாணவர் அணி செயலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு நேர்காணல் நடத்துகிறார்கள். எனவே இந்த கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பொறுப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். நேர்காணலில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது வயது சான்றிதழை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்று மாவட்ட கழக செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் கேட்டு கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்