தி.மு.க. மாணவரணி ஆலோசனை கூட்டம்

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-09 19:18 GMT

இட்டமொழி:

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி ஆலோசனை கூட்டம், பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் எஸ்.பி.எஸ்.பிரபாகரன், எஸ்.கே.சீனிதாஸ், ஆ.லட்சுமணன், ச.ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் மாணவரணிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை சேர்ப்பது குறித்தும், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவரணி சார்பில் பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி நடத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஆ.பிரபாகரன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கே.கணேஷ்குமார் ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்