நன்கொடை வழங்காததால் தள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கிய தி.மு.க. பிரமுகர் கைது

நன்கொடை வழங்காததால் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கிய தி.மு.க. பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-01-08 07:40 GMT

கோயம்பேடு, சேமாதம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 48), இவர் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இரவு நேரத்தில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நன்கொடை கேட்டு கோயம்பேட்டை சேமாத்தம்மன் நகரை சேர்ந்த முத்து (27) என்பவர் வந்தார். இவர் 127-வது வட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவருடன் அவரது நண்பர் விஸ்வநாதன் (28), ஆகிய இருவரும் அய்யப்பன் பூஜை இருப்பதால் நன்கொடை கேட்டுள்ளனர்.

அதற்கு தேவேந்திரன் பணம் தராமல் இருந்ததால் ஆத்திரமடைந்த முத்து நேற்று முன்தினம் தள்ளு வண்டியை அடித்து நொறுக்கி கடையில் இருந்த பொருட்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு தேவேந்திரனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த தேவேந்திரன் கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் தி.மு.க. நிர்வாகியான முத்து மற்றும் அவரது நண்பர் விஸ்வநாதன் ஆகிய இருவரும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நன்கொடை கொடுக்காத தள்ளுவண்டிக்காரரை தாக்கிய வழக்கில் தி.மு.க. பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்