தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
சுத்தமல்லியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
பேட்டை:
மானூர் தெற்கு ஒன்றியம் சார்பில் சுத்தமல்லியில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பிரதிநிதி அருணாச்சலம் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சுப்ரமணியன், சிவன் பாண்டியன், ராமச்சந்திரன், இஸ்மாயில், ஊராட்சி தலைவர் சின்னத்துரை, காசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணி முத்து வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் முப்பிடாதி தேவி வாழ்த்தி பேசினார். தி.மு.க. செய்தி தொடர்பு துணைச் செயலாளர் கோவை செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கோவை செல்வராஜ் ஆகியோர் மக்களுக்கு வேட்டி- சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் வி.கே.முருகன், மேயர் பி.எம்.சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை. மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா, ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், கல்லூர் எஸ்.மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேட்டை ரூரல் ஊராட்சிக்கு உட்பட்ட கோடீஸ்வரன் நகர் பகுதியில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை 'ரிப்பன்' வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மானூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜபிரியா, அங்கன்வாடி மேற்பார்வையாளர் குருசிஉள்பட பலர் கலந்து கொண்டனர்.