தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு த.ம.மு.க.வினர் போராட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு த.ம.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் தனியார் மதுபான பார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி எம்.ஜி.ஆர். நகரில் நீண்டகாலமாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் வேந்தர்பாலா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் தங்களின் கோரிக்கை தொடர்பான மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர்.