தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

விளாத்திகுளத்தில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.

Update: 2022-11-13 18:45 GMT

எட்டயபுரம்:

தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

விளாத்திகுளத்தில் நடந்த கூட்டத்தில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல், தி.மு.க வாக்கு வங்கியை அதிகரித்தல் பற்றிய ஆலோசனை வழங்கப்பட்டது கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், விளாத்திகுளம் நகர தி.மு.க. செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன் ராஜ், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், சின்ன மாரிமுத்து, ஓட்டப்பிடாரம் காசி விஸ்வநாதன், நவநீத கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் வசந்தம் ஜெயக்குமார், ராஜாக்கண்ணு, இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், மகேந்திரன், டேவிட் ராஜ், ஸ்ரீதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்