இடைத்தேர்தலில் வாக்கு கேட்க திமுகவினர் ஒட்டகத்தில் செல்வது கோமாளித்தனம் - ஜெயக்குமார் தாக்கு

ஈரோடு வாக்காளர்களுக்கு பணம், இறைச்சி, உள்ளிட்ட பொருட்களை திமுகவினர் வழங்கி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Update: 2023-02-16 10:01 GMT

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை அதிமுக சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை உள்ளிட்டோர் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,

ஈரோடு கிழக்கில் தினந்தோறும் அத்துமீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. ஆளுங்கட்சியினர் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லை. ஒட்டகத்தில் செல்கிறார்கள், வடை, பஜ்ஜி போண்டா சுடுகிறார்கள். ஒட்டகத்தில் செல்வது தவறு. சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு புகார் அளித்துள்ளோம்.

வாக்களர்களுக்கு ரூ.500, சிக்கன், மட்டன், கறி அளித்து வருகின்றனர்.வாக்காளர்களின் மனம் ஒரே மனம் தான். ஆட்சி மீதான அதிருப்தியில் இரட்டை இலைக்கு வாக்களித்து ஆளுங்கட்சிக்கு சவுக்கடி கொடுப்பார்கள்.

முதலமைச்சரின் ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில், பணம் செல்லும் வழியை அடைத்துவிடாதீர்கள். திமுகவினர் பணம் கொண்டு செல்வதை தடுக்காதீர்கள் என அதிகாரிகளிடம் சொல்லப்படுகிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஒரே நாளில் 9 கொலை நடந்துள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இதுவரை ரூ 35.64 கோடி செலவு செய்துள்ளார். கொள்ளையடித்த பணத்தை வாரி வாரி இறைக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்