தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நாளை முதல் சுற்றுப்பயணம்

நாளை முதல் 23-ம் தேதி வரை தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

Update: 2024-02-04 03:42 GMT

சென்னை,

தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுரையின்படி, நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கீழ்க்கண்ட அட்டவணைப்படி பயணம் மேற்கொண்டு, தொழிற்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துகளை பெறுவார்கள்.

அதன்படி, தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, நாளை (5-ம் தேதி) தூத்துக்குடிக்கு செல்கிறது. எம்.பி. கனிமொழி தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர் தூத்துக்குடியில் பொதுமக்களை சந்தித்து கருத்துகளை கேட்கின்றனர்.

6-ம் தேதி கன்னியாகுமரி, 7-ம் தேதி மதுரை, 8-ம் தேதி தஞ்சாவூர், 9-ம் தேதி சேலம், 10-ம் தேதி கோவை, 11-ம் தேதி திருப்பூர், 16-ம் தேதி ஓசூர், 17-ம் தேதி வேலூர், 18-ம் தேதி ஆரணி, 20-ம் தேதி விழுப்புரம், 21,22,23 ஆகிய தேதிகளில் சென்னை, ஆகிய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்.

இந்த நகரங்களுக்கு கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு வருவதற்கு முன்பாக, இக்குழு வருவதை உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதோடு, கோரிக்கை மனு பெறுவதற்கான இடவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என அந்தந்த மாவட்ட கழகச் செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்