தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியுடன் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார்.

Update: 2023-09-30 09:36 GMT

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

நீண்ட காலமாக தொடர்ந்து வரும் இந்த பிரச்சினைக்கு நதிநீர் இணைப்பு ஒன்றே நிரந்தர தீர்வு என்று குறிப்பிட்ட பிரேமலதா விஜயகாந்த், தேசிய நதிகளை இணைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கவர்னரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

Full View

 

Tags:    

மேலும் செய்திகள்