பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து தே.மு.தி.க. வருங்காலத்தில் இமாலய வெற்றி பெரும் - விஜயகாந்த்

இது ஜனநாய ரீதியில் நடைபெற்ற தேர்தல் அல்ல. முழுக்க முழுக்க பணத்தை நம்பியே நடைபெற்ற தேர்தல் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

Update: 2023-03-03 11:26 GMT

சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். தேர்தல் பிரசாரம் தொடங்கியது முதல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்ற நாள் வரை பண மழை பொழிந்தது. எந்த தொகுதியிலும் நடைபெறாத வகையில் வாக்காளர்களை காலை முதல் மாலை வரை அடைத்து வைத்த கொடூரமும் அரங்கேறியது. இது ஜனநாய ரீதியில் நடைபெற்ற தேர்தல் அல்ல. முழுக்க முழுக்க பணத்தை நம்பியே நடைபெற்ற தேர்தல்.

இனிமேல் நடைபெறும் இடைத்தேர்தல்களில் எந்த கட்சியின் வேட்பாளர் மரணம் அடைகிறாரோ, அந்த கட்சியில் உள்ள ஒரு நபரையே எம்.எல்.ஏ.வாக அறிவித்து விடுங்கள். எதற்காக இந்த கண்துடைப்பு நாடகம். பண பலம் அதிகார பலம், ஆட்சி பலத்தை எதிர்த்து நமக்கு கிடைத்த ஒவ்வொரு ஓட்டுகளும் ஆயிரம் மடங்கு சமம். இது உண்மைக்கும், நேர்மைக்கும் கிடைத்த ஓட்டுகள்.

இடைத்தேர்தலில் இரவு பகல் என பாராமல் உழைத்த நமது நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இடைத்தேர்தல் முடிவுகளை கண்டு நிர்வாகிகள் துவண்டு விடாதீர்கள், கவலைப்படாதீர்கள். பீனிக்ஸ் பறவைபோல் மீண்டெழுந்து வருங்காலத்தில் இமாலய வெற்றி பெறுவோம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தருமமே வெல்லும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்