தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Update: 2022-06-13 00:03 GMT

வள்ளியூர்:

நெல்லை புறநகர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வள்ளியூரில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜெயசேகர பாண்டியன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் முருகராஜா வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் விஜி வேலாயுதம், கேப்டன் மன்ற மாநில துணை செயலாளர் விஜய கணேசன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளான வருகிற ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுவது. வருகிற செப்டம்பர் மாதம் 14-ந்தேதி தே.மு.தி.க. 18-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடத்துவது. இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது. தே.மு.தி.க. உட்கட்சி தேர்தலை இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணை செயலாளர் வக்கீல் அய்யப்பன், செயற்குழு உறுப்பினர் வெள்ளத்துரை, பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்