தீபாவளி பண்டிகை: அக்.29 - நவ.12 வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை
தீபாவளியை முன்னிட்டு அக்.29 - நவ.12 வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை,
தீபாவளிப் பண்டிக்கையை முன்னிட்டு ஆண்டுதோறும் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி தீபாவாளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தீவுத் திடலில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை செய்யப்படவுள்ளது. தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்காக 55 கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.