தீபாவளி பண்டிகை: சென்னை முழுவதும் 17 பட்டாசு தீ விபத்துகள்...!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பட்டாசு வெடித்ததில் 17 தீ விபத்துகள் நடைபெற்றதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-10-24 05:20 GMT

சென்னை,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையே புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பட்டாசு வெடித்ததில் 17 தீ விபத்துகள் நடைபெற்றதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பொதுமக்கள் பட்டாசு வெடித்ததாகவும், இந்த விபத்துக்கள் அனைத்தும் சிறிய அளவிலான விபத்துகள் என்பதால் பெரிய அளவிலான பொருட்சேதமோ, தீக்காயங்களோ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கொளத்தூரில் உள்ள தனியார் உர நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வாகனங்கள் சேதம் அடைந்தன. 3 தீயணைப்பு வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

சென்னை, அசோக் நகரில் உள்ள தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. 5 தீயணைப்பு வாகனம் கொண்டு, தீயை அணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்