தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி

தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி

Update: 2022-05-31 13:24 GMT

கோவை

விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டியை சேர்ந்தவர் செல்வகணேஷ் (22). இவர் கோவை ஈச்சனாரியில் அறை எடுத்து தங்கி அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். செட்டிபாளையத்தில் உள்ள தனது நண்பர்களை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் தனது அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

கணேசபுரம் சீனிவாசநகர் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில பின் தொடர்ந்து வந்த 3 பேர் கும்பல் செல்வகணேசை வழிமறித்தனர். பின்னர் அவரை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.4,800, மற்றும் 2 செல்போன்களை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து செல்வகணேஷ் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்