மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தார்.
துணைத்தலைவர் மணி வரவேற்றார். மாநில செயலாளர் அம்சராஜ் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
கூட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் வழங்க வேண்டும்.
சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதிய சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு வழங்கும் பணியை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில செயலாளர் டானியல் ஜெயசிங், மாவட்ட செயலாளர் பிரபு, பொருளாளர் ராஜா, துணைத் தலைவர் ஸ்ரீதர், அண்ணாதரை, பார்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் பரிதிமால் கலைஞன் நன்றி கூறினார்.