வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2022-10-22 20:12 GMT

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருமான ரமேஷ் சந்த் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி முன்னிலையில் நடந்த இந்த ஆய்வின்ேபாது, முத்துசேர்வார்மடம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி, குண்டவெளி ஊராட்சியில் மீன்சுருட்டி புதுத்தெரு இருளர் காலனியில் சிமெண்டு சாலைப் பணி, ராமதேவநல்லூர் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் பண்ணைக் குட்டை பணி உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மீன்சுருட்டி ரேஷன் கடையை நேரில் பார்வையிட்டு, பொருட்களின் தரம், பொருள் இருப்பு, பணியாளர் வருகைப் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்தார். இறவாங்குடி ஊராட்சியில் விவசாயிகளின் 15 ஏக்கர் தரிசு நிலத்தை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு, விவசாயிகளிடம் கலந்துரையாடி, அடுத்த பயிர் சாகுபடி குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்