பாரம்பரிய நெல் விதைகள் வினியோகம்

50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வினியோகம் செய்யப்படுகிறது என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-17 18:05 GMT

திருவாரூர்;

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் ஆத்தூர் கிச்சலி சம்பா, மாப்பிள்ளை சம்பா தூய மல்லி முதலான பாரம்பரிய நெல் ரக விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பாரம்பரிய நெல் ரக விதைகள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கிலோ ரூ.25 என்ற விலையில் வினியோகம் செய்யப்படும்.ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 20 கிலோ வரை மானியத்தில் வழங்கப்படும்.சம்பா பருவத்திற்கு ஏற்ற ரகங்களான ஆத்தூர், கிச்சலி சம்பா, மாப்பிள்ளை சம்பா விதைகள் 20 டன் அளவுக்கு இருப்பில் உள்ளன. எனவே விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் ரக விதைககளை வாங்கி பயன் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்