6 அடிக்கு குறைந்த அளவில் கரும்பு வினியோகம்

விழுப்புரம் பகுதி ரேஷன் கடைகளில் 6 அடிக்கு குறைந்த அளவில் கரும்பு வினியோகம் பொதுமக்கள் அதிருப்தி

Update: 2023-01-09 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 1,254 ரேஷன் கடைகள் மூலம் 6,15,020 குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் முகாம்களில் வசிக்கும் 434 பேர் என மொத்தம் 6,15,454 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 6 அடியில் ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதில் அரசாணையில் உள்ளவாறு 6 அடியில் உள்ள கரும்புகளை மட்டுமே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதோடு அதற்காக அமைக்கப்பட்ட 13 குழுக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அக்குழுவினர் 6 அடியில் உள்ள கரும்புகளை கொள்முதல் செய்தனர். இ்ந்த நிலையில் நேற்று விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சீனிவாசா நகர், 1-வது வார்டு விராட்டிக்குப்பம் பாதையில் உள்ள ரேஷன் கடை உள்ளிட்ட பல கடைகளில் 6 அடிக்கு குறைவான அளவில் கரும்புகள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. அரசாணையை மீறி 6 அடிக்கு குறைந்த அளவில் கரும்பு வழங்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியடைந்தனர். சிலர், ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்