விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் விநியோகம்
விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டது.
திருமருகல் ஒன்றியம் பில்லாளி ஊராட்சியில் மாவட்ட வேளாண்மை துறை சார்பில் ஒருங்கிணைந்த கிராம வேளாண்மை திட்டத்தின்கீழ் 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 வீதம் 600 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குனர் தேவேந்திரன் தென்னங்கன்றுகளை வழங்கினார். இதில் வேளாண் துணை இயக்குனர் ஹேமா ஹெப்சிமா நிர்மலா, வேளாண் உதவி இயக்குனர் புஷ்கலா, வேளாண் அலுவலர் செந்தில்வாசன், ஊராட்சி மன்ற தலைவர் தேவி சகாயராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரூர் மணிவண்ணன், துணைத்தலைவர் ஜோதி, வேளாண்மை உதவி அலுவலர் பழனிவேல், ஊராட்சி செயலாளர் மணிமாறன், வார்டு உறுப்பினர்கள் மாதவன், ஆனந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.