சொத்து பிரிப்பதில் இருதரப்பினர் இடையே மோதல்

திருமயம் அருகே சொத்து பிரிப்பதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-02-10 19:35 GMT

தகராறு

திருமயம் அருகே உள்ள மாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவருக்கு செல்வராஜ் (வயது 49), முருகேசன் (48) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் இவர்களுக்கு சொந்தமான பூர்வீக நிலம் திருமயம் அடுத்துள்ள ஆதனூர் கிராமத்தில் உள்ளது. இந்த சொத்து பிரிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இருதரப்பினரும் பூர்வீக இடத்திற்கு காரில் சென்று உள்ளனர். அப்போது சொத்து பிரிப்பதில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

கார்கள் சேதம்

இதில் ஆத்திரம் அடைந்த இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். பின்னர் அரிவாள், இரும்பு கம்பிகளை எடுத்து கார்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக செல்வராஜ், முருகேசன் ஆகியோர் திருமயம் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர்.இதன்பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்