பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்

தலைஞாயிறில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2022-06-23 17:49 GMT

வாய்மேடு

தலைஞாயிறு பேரூராட்சியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சிமன்ற தலைவர் செந்தமிழ்ச்செல்வி பிச்சையன் முன்னிலை வகித்தார். முன்னதாக பேரூராட்சி செயல் அலுவலர் குகன் வரவேற்றார். இதில் பேரிடர் மாவட்ட பயிற்றுனர் மணிமேகலை மற்றும் தலைஞாயிறு தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் பேரூராட்சி துணைத்தலைவர் கதிரவன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் குமார் நன்றி கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்