உளுந்து விதை பண்ணையில் வேளாண்மை இயக்குனர் ஆய்வு

உளுந்து விதை பண்ணையில் வேளாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2022-11-11 18:20 GMT

வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம், கந்திலி வட்டாரத்தில் பெரியகண்ணாலப்பட்டி கிராமத்தில் உள்ள 15 ஏக்கர் தரிசு நிலத்தொகுப்பில் ஆழ்துளை கிணறு மற்றும் தரிசு நிலங்களில் உளுந்து விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை வேளாண்மை இயக்குனர் உமாதேவி ஆய்வு செய்தார்.

குனிச்சி கிராமத்தில் தரிசு நிலத்தொகுப்பில் உளுந்து, கொள்ளு மற்றும் துவரை சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

எலவம்பட்டி கிராமத்தில் பண்ணைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தென்னங்கன்றுகள், ஊரக வளர்ச்சித் தறை மூலம் மரங்கள் நடவுப்பணி, வேளாண் பொறியியல் துறை மூலம் தூர் வாரி சுத்தம் செய்யப்பட்ட ஜீவானந்தபுரம் ஏரி வரத்துக்கால்வாய், தோட்டக்கலைத்துறையின் மூலம் தக்காளி சாகுபடி வயலில் சொட்டு நீர்ப்பாசனம் ஆகியவற்றையும் அவர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன், கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராகினி, தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜீவிதா, உதவி செயற்பொறியாளர் ஆனந்தன், மகேந்திரவர்மன், வேளாண்மை அலுவலர் ஜெயசுதா மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், தனகோட்டி, சரத்குமார், தினேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்