அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை

தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக கலெக்டர் சாருஸ்ரீ கூறியுள்ளார்.

Update: 2023-07-29 19:15 GMT

கொரடாச்சேரி;

தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக கலெக்டர் சாருஸ்ரீ கூறியுள்ளார்.

தொழிற்பயிற்சி நிலையங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி தாலுகாவில் தட்டாங்கோவில் என்ற ஊரில் இயங்கி வரும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தொழிற்கல்வியில் சேர்ந்து பயில விருப்பமுள்ளவர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களுடன் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று உடனடியாக பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வரை ஆகும். பெண்களுக்கு 14 முதல் உச்ச வயது வரம்பு இல்லை. இதில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

உதவித்தொகை

இங்கு விரைவாக வேலைவாய்ப்பை பெற்றுதரக்கூடிய அதிநவீன தொழிற்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தொழிற்பயிற்சி படிக்கும் காலத்தில் தகுதியுடைய மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சீருடை, சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், பஸ்பாஸ் மற்றும் பயிற்சிக்கு தேவையான நுகர்பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.மேலும் மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையும், படித்து முடித்த பின் வளாக நேர்காணல் மூலம் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்து உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்