திண்டிவனம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அர்ஜூனனுக்கு கொரோனா

திண்டிவனம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-09-04 18:50 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த வடகோட்டிபாக்கத்தை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 52). திண்டிவனம் சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினரான இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி தொல்லை இருந்து வந்தது.

இதையடுத்து அவர் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதோடு, டாக்டர்கள் ஆலோசனைப்படி கொரோனாவுக்கு உரிய சிகிச்சை பெற்று வருகிறார். இவர் ஏற்கனவே ஒரு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

மேலும் செய்திகள்