திண்டுக்கல்லில், போக்சோ கோர்ட்டு

திண்டுக்கல்லில், போக்சோ கோர்ட்டை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் திறந்து வைத்தார்.

Update: 2023-04-26 14:52 GMT

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில், பாலியல் குற்றங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் போக்சோ கோர்ட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் தலைமை தாங்கி, ரிப்பன் வெட்டி போக்சோ கோர்ட்டை திறந்து வைத்தார். கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், தலைமை ஜூடிசியல் மோகனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் பேசுகையில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழ் சிறப்பு கோர்ட்டு திறக்கப்பட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டில் 228 போக்சோ வழக்குகள் பதிவாகி இருந்தன. மேலும் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் மகிளா கோர்ட்டு மூலம் விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த வழக்குகளின் எண்ணிக்கை 258 ஆக உள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் போக்சோ சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்த விழாவில் முதன்மை சார்பு நீதிபதி மீனாசந்திரா, சார்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், கோர்ட்டு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்