திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
திண்டுக்கல்லில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜா தலைமை தாங்கினார். துணை தலைவர் சோபியா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், கூட்டுறவு நகர் பின்புறம் உள்ள ராஜா குளத்தை தூர்வாரி அதில் நடை பயிற்சி தளம் அமைக்க வேண்டும், கள்ளிப்பட்டி, அலக்குவார்பட்டியில் சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினர். பின்னர் வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டு 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து ஒன்றிய பகுதிகளில் சாலை, குடிநீர் மற்றும் சுகாதார வசதி ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.