திண்டுக்கல்: மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் - போலீஸ்காரர் பலி

நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-07-01 07:10 GMT

நிலக்கோட்டை,

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி. இவர் திண்டுக்கல் மாவட்ட சிறையில் வார்டனாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் நிலக்கோட்டையிலிருந்து அணைப்பட்டி வழியாக ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குண்டலப்பட்டி பிரிவு அருகே வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் அசரத் அலி என்பவர் வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பால்பாண்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அசரத் அலி மேல் சிகிச்சைக்காக நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்