தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தபால்நிலையம் வேண்டும்
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மேலும் பலர் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த பகுதியில் தபால் நிலையம் இல்லை. மேலும் தபால் நிலையத்திற்காக பல கிலோ மீட்டர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் தபால் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்விளக்குகள் தேவை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிவன் கோவிலில் பொதுமக்கள் வசதிக்காக இலவச நூலகம் செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு போதிய மின்விளக்குகள் இல்லை. இதனால் இங்கு வரும் வாசகர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த நூலகத்தில் தேவையான மின்விளக்குகள் அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் அச்சம்
விருதுநகர் அருகே ஆமத்தூரில் உள்ள சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள் கட்டிடம் இடிந்து விழுந்து விடுமோ என அச்சப்படுகின்றனர். எனவே சேதம் அடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை உடனே அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமடைந்த கட்டிடம்
விருதுநகர் அருகே குந்தலப்பட்டி கிராமத்தில் உள்ள சமுதாயக்கூட கட்டிடம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. விபரீதம் ஏதும் நேருவதற்கு முன்பாக இந்த சமுதாயக்கூடத்தை அகற்றி விட்டு புதிய சமுதாயக்கூடம் கட்டித்தர சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூங்கா அமைக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சியில் 9-வது வார்டில் பூங்கா இ்ல்லை. இந்த பகுதியில் பூங்கா அமைத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் பயன்பெறுவர். எனவே மேற்கண்ட பகுதியில் பூங்கா அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.