தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-22 18:56 GMT

நோய் பரவும் அபாயம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி 9-வது வார்டு மாரியம்மன் கோவில் பின்புறம் குப்பைகள் நிரம்பி காணப்படுகிறது. ஒரு சிலர் பொது இடத்தில் அசுத்தம் செய்கின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. தொற்றுேநாய் பரவும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுவதுடன், தேவையான இடங்களில் கழிவறை கட்டிக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சபரிமலை, செட்டியார்பட்டி.

சேதமடைந்த ரேஷன் கடை

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை யூனியன் தாயில்பட்டி அருகே மடத்துப்பட்டியில் உள்ள ரேஷன் கடை கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அச்சத்துடனே வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. விபரீதம் எதுவும் நிகழ்வதற்கு முன்பாக சேதமடைந்த ரேஷன் கடையை அகற்றி விட்டு புதிய கடை கட்டித்தர வேண்டும்.

பொதுமக்கள், தாயில்பட்டி.

பயணிகள் அவதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலைய நடைமேடை தளம் பெயர்ந்து சிதிலமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள், பொதுமக்கள் அதனை பயன்படுத்த சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நடைமேடையை சீரமைக்க வேண்டும்.

பிரணவம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

குண்டும், குழியுமான சாலை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் பக்தர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

சுந்தரமூர்த்தி, இருக்கன்குடி.

ஊருணி தூர்வாரப்படுமா?

விருதுநகர் மாவட்டம் மருளூத்து ஊராட்சி வாய்பூட்டான்பட்டி பகுதியில் சாலை அருகே உள்ள ஊருணி தூர்வாரப்படாமல் கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஊருணியில் தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை. எனவே இந்த ஊருணியில் உள்ள கருவேல மரங்களை அகற்றி தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரத்ராஜா, மருளூத்து.

ஆபத்தான பயணிகள் நிழற்குடைதினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முக்குராந்தலில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் சிரமப்படுகிறார்கள். எனவே பயணிகள் நிழற்குடையை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், முக்குராந்தல். 

Tags:    

மேலும் செய்திகள்