தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-07-30 23:06 GMT

சுகாதார சீர்கேடு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம். வடபழஞ்சி காமராஜர் பல்கலைக்கழகம் அருகில் ரெயில்வே கீழ் பாலத்தில் நீண்ட காலமாக தண்ணீர் தேங்கி இருக்கிறது. இது தற்போது கழிவுநீராக மாறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இங்கு தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருப்பரங்குன்றம்.

சிக்னல் சரி செய்யப்படுமா?

மதுரை மாநகராட்சி 47-வது வார்டு சின்னக்கடை வீதி சந்திப்பில் உள்ள சிக்னல் பழுதாகி உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சிக்னலை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசோக்குமார், மதுரை.

கொசுத்தொல்ைல

மதுரை ஆண்டாள் புரம் வசுதாரா வளாகத்தில் கழிவுகளாலும், குப்பை குவியல்களாலும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் டெங்கு போன்ற நோய்களால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமாரத்தேவன், மதுரை.

குவிந்து கிடக்கும் குப்பை

மதுரை மாநகரில் சில இடங்களில் அருகே குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கின்றன. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிப்டுகின்றனர். எனவே இந்த பகுதியில் குப்பைகள் தேங்காதவாறு அவ்வப்போது அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரமேஷ், மதுரை.

போக்குவரத்துக்கு இடையூறு

மதுரை மாவட்டம் சுந்தரராஜபுரம் மார்க்கெட் அருகே உள்ள சாலையில் பாதாள சாக்கடை பணி முடிந்ததும் சாலையில் உள்ள பள்ளத்தினை மூடாமல் உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூராக உள்ளது. எனவே இந்த பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன், மதுரை.

Tags:    

மேலும் செய்திகள்