தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயனற்ற அடிபம்பு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, கோவனூர் ஊராட்சி கிராமத்தில் மேக்கினிப்பட்டி ஆதிதிராவிடர் நல குடியிருப்பு பகுதியில் உள்ள அடிபம்பு பல ஆண்டுகளாக சேதமாகி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் இதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தெருநாய்கள் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுட்டுத்திரிகின்றன. இவை சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதினால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை தெரு நாய்கள் கடிக்க துரத்துவதினால் அவர்கள் பெரிதும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வாகன ஓட்டிகள் அவதி
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட கண்டியன்தெரு சாலை மிக மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலையின் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நடந்து செல்லவே சிரமபடும் நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே கண்டியன்தெரு சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள குளம்
புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூர் ஊராட்சி, பொன்னங்கண்ணிப்பட்டி மற்றும் வாராப்பூர் கிரமத்தை சுற்றி சுமார் 1,000 மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் தினமும் குளிப்பதற்கு இப்பகுதியில் உள்ள குளத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த குளத்தை பராமரிப்பு இன்றி தற்போது பயன்படுத்த முடியாத அளவிற்கு செடி-கொடிகள், ஆகாய தாமரைகள் முளைத்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அசுத்தமாகும் குளத்து நீர்
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, கீழநாஞ்சூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் குடிநீருக்காக குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்திற்கு வரும் வரத்து வாய்க்கால் வழியாக இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீர், மழை பெய்யும் போது அடித்து வந்து குளத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த தண்ணீரை குடிநீருக்காக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.