சுத்தம் செய்யப்படாத நீர்த்தேக்க தொட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-10 18:34 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை. குடிநீரில் மாசுக்கள் கலந்து வருகின்றன. இதனை குடிப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், டி.களத்தூர்.

Tags:    

மேலும் செய்திகள்