பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி.

பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் பகுதி.

Update: 2022-07-02 20:26 GMT


போக்குவரத்துக்கு இடையூறு

அந்தியூர் பஸ் நிலையம் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக பலர் அதிக அளவில் விளம்பர அறிவிப்பு பலகைகள் வைத்து உள்ளனர். இதனால் அந்த பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டு உள்ள விளம்பர பலகைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவீந்திரன், அந்தியூர்.

தெருவிளக்குகள் ஒளிருமா?

மொடக்குறிச்சி ஒன்றியம் 46 புதூர் ஊராட்சிக்கு உள்பட்ட மூலப்பாளையம் அசோக் நகரில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூட தெரு மற்றும் அந்த பகுதியில் உள்ள 5 வீதிகளில் 15 தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த தெருவிளக்குகள் கடந்த ஒரு மாதமாக எரியவில்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த வீதியை சேர்ந்த முதியவர்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் ரோட்டில் நடமாட அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் ஒளிர சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அசோக் நகர்.

ரோட்டில் ஓடும் குடிநீர் 

ஈரோடு சென்னிமலை ரோட்டில் இருந்து சூரம்பட்டி அணைக்கட்டு செல்லும் ரோட்டில் கடந்த சில மாதங்களாக குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளங்கோ, ஈரோடு.

நன்றி 

அந்தியூர் புதுப்பாளையம் வெள்ளப்பிள்ளையார் கோவில் அருகே மிகவும் ஆபத்தான மேல்நிலை குடிநீர் தொட்டி இருந்தது. இதுபற்றிய செய்தி 'தினத்தந்தி' நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தினர் ஆபத்தான குடிநீர் மேல்நிலை தொட்டியை பாதுகாப்புடன் இடித்து அகற்றினர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்துக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

சேகர், புதுப்பாளையம்.

Tags:    

மேலும் செய்திகள்